
மலாக்கா, நவ 3 – கிட்டத்தட்ட 102 கிலோ எடையுள்ள 1.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பைக் கொண்ட போதைப் பொருட்களை மலாக்கா குற்றப்புலனாய்வுத்துறையின் அதிகாரிகள் இன்று அழித்தனர். 2004 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை 2,835 விசாரணையில் சம்பந்தப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் அழிக்கப்பட்டதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஸைனோல் சமா தெரிவித்தார். இந்த போதைப் பொருட்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் முழுமையடைந்ததோடு ரசாயனத்துறையும் அந்த போதைப் பொருட்கள் மீதான ஆய்வை மேற்கொண்டதாக அவர் கூறினார்.