பத்து பஹாட், மார்ச் 3 – பேங்க் நெகாராவின் முன்னாள் கவர்னர் Zeti Akhtar Aziz மற்றும் அவரது குடும்பத்தினர் 1MDB நிதியை பெற்றதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் தாம் முதல் முறை பிரதமராக பதவியில் இருந்த விலகிய பின்னர் அல்லது நஜீப் ரசாக் பிரதமராக பதவி வகித்திருந்தபோது இது நடந்திருக்கலாம் என அவர் கூறினார்.
அந்த மோசடி நடவடிக்கையில் Zeti சம்பந்தப்பட்டாரா இல்லையா என்பதை விசாரணையின் மூலமே நாம் உறுதிப்படுத்த முடியும் என பெஜூவாங் கட்சியின் தலைருமான டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.