
புத்ரா ஜெயா, ஆக 25 – 1MDB வழக்கு விசாரணையை தடுக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீண்டும் தோல்வி கண்டார். தற்போது நடைபெற்றுவரும் 1 MDB வழக்கு விசாரணையை தடுத்து நிறுத்துவதற்கு சிறப்பு அம்சங்கள் எதுவும் இல்லையென மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்போது நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் சிறப்பு சூழ்நிலை எதுவும் ஏற்படவில்லையென அரசு தரப்பு வழக்கறிஞர் Kamal Baharin Omar தெரிவித்திருப்பதை மூவர் கொண்ட மேல் முறையீட்டு விசாரணைக்கு தலைமையேற்ற நீதிபதி Hadhariah Syed Ismail தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணையை நிறுத்த வேண்டும் என்பதற்கான காரணம் அல்லது அவசியம் இல்லையென்பதால் அதற்கான விண்ணப்பத்தை ஏற்கும் தகுதியை நீதிமன்றம் கொண்டிருக்கவில்லயென அவர் தெரிவித்தார். பொதுமக்களின் நலனைக் கருதி முழுமையான விசாரணை தொடர வேண்டும் என நீதிபதி Ahmad Zaidi Ibrahim மற்றும் நீதிபதி எஸ்.எம் கோமதி சுப்பையா ஆகியோருடன் விசாரணைக்கு தலைமையேற்றிருந்த நீதிபதி Hadhariah தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை 173 நாட்கள் நடந்துள்ளதோடு இதுவரை அரசு தரப்பில் 46 சாட்சிகள் அழைக்கப்பட்டுவிட்டது. தற்போறு இதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமை தொடரும்.