Latestமலேசியா

10 ஆண்டுகளாக போலியான அடையாள அட்டையை பயன்படுத்திய தம்பதியர்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14 – கோத்தா டாமான்சாராவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது கடந்த 10 வருடங்களாக போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பணிபுரிந்து வந்த பிலிப்பைன்ஸ் தம்பதியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட அந்த தம்பதியர்கள் ஜோகூர் பாருவின் வழியாக மலேசியாவிற்கு குடிநுழைந்திருப்பதாக தேசிய பதிவு துறை தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய RM 350 ரிங்கிட் முதல் RM 500 ரிங்கிட் வரை கட்டணத் தொகையை செலுத்தி அந்த தம்பதிகள் போலியான அடையாள அட்டையை வாங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்த தம்பதியர்கள் வேலை தேடுவதற்காக அந்த போலி அடையாள அட்டையை பயன்படுத்தியுள்ளனர்.

முன்னதாக, ஜோகூரில் அமைந்துள்ள ஒரு சவக்கார தொழிற்சாலையில் பணிப்புரிந்து வந்த வேளையில் தற்போது போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி பாதுகாப்பு காவலர்களாக வேலை செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!