ரவாங், பிப் 13 – பதின்ம வயது பெண் ஒருவர் ரவாங், தாமான் துன் தேஜாவிலுள்ள அடுக்குமாடி வீட்டில் 10 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார். நேற்று மாலை மணி 3.17 அளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் இயக்குனர் நோராஷாம் காமிஸ் தெரிவித்தார்.
14 வயதுடைய அந்த பெண் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையின்ர் கண்டனர். மேல் நடவடிக்கைக்காக அப்பெண்ணின் சடலம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.