
கோலாலம்பூர், செப்டம்பர் 14 – கடந்த 12 மாதங்களில், மலேசியர்களில் 64 விழுக்காட்டினர், ஏதாவது ஒரு வித பாகுபாட்டால் பாதிக்கப்பட்டது, Architect’s of Diversity அமைப்பின் சமீபத்திய ஆய்வு காட்டுகிறது.
அண்மைய காலமாக நாட்டில் சமூக -பொருளாதார நிலையால் மிக அதிகமாக 38 விழுக்காட்டினர் பாகுபாடுகளை எதிர்கொண்டதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, வயது ரீதியாக 33 விழுக்காட்டினரும், இன பாகுபாட்டால் 32 விழுக்காட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும், மத அடிப்படையிலான பாகுபாடுகளை மிக அதிகமாக 40 விழுக்காட்டு இந்துக்கள் அனுபவிக்கும் வேளை ; கிறிஸ்துவர்கள் 26 விழுக்காடும், பெளத்தர்கள் 22 விழும்காடும், முஸ்லீம்கள் 20 விழுக்காட்டினரும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
சமூக ஊடகங்கள் வாயிலாக, 32 விழுக்காட்டினர் பாகுபாட்டை உணர்ந்துள்ள வேளை ; வேலை தேடி செல்லும் போது 30 விழுக்காட்டினரும், வேலை இடத்தில் 29 விழுக்காட்டினரும் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.
51 விழுக்காட்டு இந்தியர்கள், வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, தங்கள் சகாக்களை விட அதிக அளவிலான பாகுபாடுகளை அனுபவிக்க நேர்ந்துள்ளதாக, அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
35 விழுக்காட்டு இந்தியர்கள் வீடு தேடும் போதும், 21 விழுக்காட்டு இந்தியர்கள் போலீசாரைக் கையாளும் போதும் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம், தங்கள் மதத்தை சார்ந்தவர்களே அதிகம் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக இந்துகள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்மள், பெளர்த்தர்கள் என அனைவதும் கருதுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
மிக அதிகமாக, இந்துகளில் 81 விழுக்காட்டினரும், கிறிஸ்துவர்களில் 73 விழுக்காட்டினரும், பெளத்தர்களில் 63 விழுக்காட்டினரும், முஸ்லீம்களில் 59 விழுக்காட்டினரும் அவ்வாறு கருதுகின்றனர்.
அதே சமயம், அந்த பாகுபாட்டைக் குறைக்கும் முயற்சிகளில் நடப்பு அரசாங்கம் வெற்றி கண்டுள்ளதா? என வினப்பட்ட போது, 45 விழுக்காட்டினர் ஆமாம் எனவும், 40 விழுக்காட்டினர் இல்லை எனவும் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.