Latestஉலகம்சினிமா

10 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் 42-வது படம்

சென்னை , செப் 9 – ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் 42-ஆவது படத்தின் மோஷன் போஸ்டர் ( motion poster) இன்று வெளியாகியிருக்கிறது.
3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

 

மோஷன் போஸ்டரின் அடிப்படையில் இப்படம் மன்னர் கால கதையை அடிப்படையாக கொண்டு போர், வீரம், உள்ளிட்ட அம்சங்களுடன் உருவாக இருப்பதாக தெரிகிறது.

தேவி ஸ்ரீ பிரசாந்தின் இசை, வெற்றி பழனிசாமியின் சினிமாட்டோகிராபி, மதன் கார்க்கியின் வசனம் என சினிமா உலகத்தில் வெற்றி நடைபோடும் குழுவினரைக் கொண்டு இப்படம் உருவாக இருப்பது, தமிழ்ப்பட ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியே .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!