ஜோகூர் பாரு. ஜூன் 8 – இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாணய பரிமாற்ற வர்த்தகருக்கு சொந்தமான 10 லட்சம் சிங்கப்பூர் டாலருடன் தலைமறைவான சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் தமது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக மலேசியா வந்தபோது கைது செய்யப்பட்டார். அந்த நபர் கைது செய்யப்பட்டதன் மூலம் 48 மற்றும் 49 வயதுடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். முதலாவதாக சில நாட்களுக்கு முன் விடுமுறைக்காக ஜோகூர் பாரு வந்த 54 வயதுடைய வர்த்தகர் ஒருவர் சுல்தான் இஸ்கந்தர் சுங்க, குடிநுழைவு மற்றும் தடுப்பு முகாமில் தனது கடப்பிதழை பரிசோதிக்கும்போது கைது செய்யப்பட்டதோடு அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அந்த மூவரும் ஜோகூர்பாருவில் கைது செய்யப்பட்டனர். 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2-ஆம் தேதி ஜொகூர் பாருவிலுள்ள நாணய பரிமாற்ற வர்த்தகருக்கு சொந்தமான பணத்துடன் அந்த வர்த்தகர் தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பில் 49 வயதுடைய மற்றொரு மலேசியர் தேடப்பட்டு வருவதாக ஜோகூர் குற்றவியல் விசாரணைத்துறையின் தலைவைர் துணை கமிஷனர் Amran Md Jusin தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close