போபால், மார்ச் 1 – வாய் வீங்கி அதிக வலி கொடுப்பதாக மத்திய பிரதேசத்தில் மருத்துவரை அணுகிய 10 வயது சிறுவனுக்கு, சோதனையில் 50 பற்கள் இருந்தது தெரிய வந்தது.
லட்சத்தில் ஒன்று அல்லது இருவருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய அரிய பல் வளர்ச்சி பாதிப்பினால் அந்த சிறுவன் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதையடுத்து, இரண்டரை மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையின் மூலமாக, 3 மருத்துவர்கள், ஒழுங்காக முளைத்திருக்காத 30 பற்களைப் பிடுங்கி எடுத்தனர்.
18 வயதாகும்போது அந்த சிறுவன் 30 வரிசையான பற்களைப் பெற்றிருப்பான் என மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.