Latestமலேசியா

10 வயது பூர்வக்குடி சிறுமி கொலை வழக்கு; சந்தேக நபர் 7 நாட்கள் தடுப்புக் காவல்

சுங்கை சிப்புட், ஆகஸ்ட் 19 – கடந்த சனிக்கிழமை, பேராக் சுங்கை சிப்புட்டில் 10 வயது பூர்வக்குடி சிறுமி, சதுப்பு நிலமொன்றில் இறந்து கிடந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞன், இன்று தொடங்கி ஏழு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்படுவான்.

வரும் ஆகஸ்ட் 25-ஆம் திகதி வரையில், அந்த 17வயது இளைஞனுக்கான தடுப்புக் காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் நூருல் அசிஃபா ரெட்சுவான் (Majistret Nurul Asyifa Redzuan) வழங்கினார்.

கம்போங் பெர்சா பூர்வக்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை காணாமல் போனதாகக் கூறப்பட்ட நூராய்னா ஹீமாய்ரா ரோஸ்லி (Nuraina Humaira Rosli), சனிக்கிழமை மாலை 4:20-க்கு, அங்குள்ள சதுப்பு நிலமொன்றில் இறந்து கிடந்தார்.

சவப்பரிசோதனையில், சிறுமியின் கழுத்தில் நெரிக்கப்பட்ட காயமும், பிறப்புறுப்பு கிழிந்தும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாகச் சுங்கை சிப்புட் மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரிடெண்டன் முகமட் கைசாம் அகமது சஹாபுதீன் (Superintenden Mohd Khaizam Ahmad Shahabudin) தெரிவித்தார்.

இதனிடையே, அச்சிறுமி செவித்திறன் குறைபாடு மற்றும் வாய் பேச முடியாத குழந்தை என்றும் வேறு இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும், கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!