போட்கோரிகா , மே 4 – மாண்டினீக்ரோவில்
( Montenegro) , 100 ஆண்டுகள் பழமையான மரத்தில் இருந்து, ஒவ்வோராண்டும் ஓரிரு தினங்களுக்கு நீரூற்றுப் போன்று நீர் ஊற்றெடுத்து ஓடும் அதிசயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Dinosa எனப்படும் கிராமத்தில் ஏற்படும் அந்த இயற்கை அதிசயத்தைக் காணும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை.
அந்த அதிசயத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் மர்மம் தான் என்ன என்ற கேள்விக்கு, அந்த மரம் அமைந்திருக்கும் நிலப்பகுதி தான் காரணமாகும்.
அந்த மரத்துக்கு அடியில் நீருற்று ஒன்று உள்ளது.
கனமழை அல்லது, பனி உறையும்போது நிலத்துக்கடியில் உள்ள அந்த நீரூற்றில் நீரின் அளவு அதிகரிக்கும். அளவுக்கதிகமான நீரினால் ஏற்படும் அழுத்தத்தினால், நீருற்றிலிருந்து பெருக்கெடுக்கும் நீர் , அந்த மரத்தின் பொந்திலிருந்து வெளியாகிறது.
இதுவே அந்த மர நீருற்றின் ரகசியமாகும்