
சிலாங்கூர் Taman Utama Ampang கில் திங்கட்கிழமையன்று தமது 100 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய திருதி Kamala Dass சின் இல்லத்திற்கு நேற்று சென்ற மாட்சியை தங்கிய பேரரசர் Al sultan Abdullah, பேரரசியார் Tuanku Azizah Aminah தம்பதியர் தங்களது பிறந்த நாள் வாழ்த்துககளை Kamala Dass சிற்கு தெரிவித்துக்கொண்டனர். பேரரசரும் பேரரசியும் சுமார் ஒரு மணி நேரம் திருமதி kamala Dass மற்றும் அவரது குடும்பத்தினரிடம் செலவிட்டதாக இஸ்தானா நெகாராவின் முகநூலில் தெரிவிக்கப்பட்டது. பேரரசரின் அதிகாரப்பூர்வ பிறந்த தினமான ஜூன் 5 ஆம் தேதி தமது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய கமலதாஸிற்கு அவர்கள் தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
1923 ஆம் ஆண்டு , ஜூன் 5 ஆம்தேதி பேரா, தாப்பாவில் பிறந்தவரான Kamala Dass சிற்கு பேராரசர் தம்பதியர் தங்களது தனிப்பட்ட அன்பளிப்பு மற்றும் பரிசுகளையும் வழங்கினர். முன்னாள் விளையாட்டு செய்தியாளர் டத்தோ George Dass அவர்களின் தாயாரான Kamala வுக்கு 11 பிள்ளைகளும், 21 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர். கமலாவின் கணவரான GA Dass 1962 ஆண்டு தமது 62ஆவது வயதில் காலமானார்.