கோலாலம்பூர், நவம்பர்-6 – 100 கிலோ கிராம் எடையிலான Methamphetamine வகைப் போதைப் பொருளை கடத்தியன் பேரில் மலேசிய ஆடவர் ஒருவர் ஆஸ்திரேலியப் போலீரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அக்டோபர் 16-ஆம் தேதி மலேசியாவிலிருந்து சரக்கு விமானத்தில் வந்திறங்கிய கணினிக்குள் அவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை, ஆஸ்திரேலிய எல்லைப் போலீசார் கண்டுபிடித்தனர்.
போதைப்பொருள் அனைத்தையும் வெளியே எடுத்து விட்டு, போய் சேர வேண்டிய முகவரிக்கே வெறும் கணினி பொட்டலத்தை அனுப்பி வைத்தனர்.
சிட்னியின் தெற்கே பொட்டலம் சென்றடைந்ததும் அக்டோபர் 30-ஆம் தேதி அதை எடுக்க வந்த போது, 45 வயது அவ்வாடவர் கைதானார்.
மறுநாளே உள்ளூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு வெளியிடப்படவில்லை.
என்றாலும் வெளியில் கள்ளத்தனமாக 1 மில்லியன் தடவை விற்கும் அளவுக்கு அதன் எடை இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.