
துபாய், மார்ச் 23 – ரமலான் பிறப்பை அடுத்து, உலகம் முழுவதுமுள்ள 180 கோடி முஸ்லீம் மக்கள் நோன்பை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனர்.
சில உலக நாடுகளில் மக்கள் இன்று நோன்பிருக்க தொடங்கியிருக்கும் நிலையில், சில நாடுகளில் நாளை மக்கள் நோன்பிருக்க தொடங்குவார்கள்.
இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, சவூதி அரேபியா உட்பட சில மத்திய கிழக்கு நாடுகளில் இன்று முஸ்லீம் மக்கள் நோன்பிருக்க தொடங்கியுள்ளனர்.
கேரளா மாநிலத்தைத் தவிர இந்தியா, வங்காளதேசம், ஶ்ரீ லங்கா ஆகிய நாடுகளில் வெள்ளிக்கிழமை மக்கள் நோன்பிருக்க ஆரம்பிப்பர்.