Latestமலேசியா

ஈரானில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் மாண்டதற்கு மலேசியா அனுதாபம்

கோலாலம்பூர், ஜன 4 – ஈரானின் தென் கிழக்கே கெர்மான் மாநிலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்டதோடு 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தது குறித்து ஈரானுக்கும் அதன் மக்களுக்கும் மலேசியா தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டது.

அந்த சம்பவம் தொடர்பில் மலேசியா கவலை அடைவதோடு ஈரானின் ஒருமைப்பாட்டிற்கு ஆதரவாக இருக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார். ஒரு பாவமும் அறியாத மக்களுக்கு எதிரான எந்தவகை வன்செயலையும் மலேசியா கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறது.

பாலஸ்தீனத்தில் ஒரு பாவமும் அறியாத மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட படுகொலையை உலகம் கண்டு மூன்று மாதங்களாகிவிட்ட நிலையில் தற்போது ஆகக்கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன் இஸ்ரேலின் மற்றொரு தாக்குதல் லெபனான்னில் நடைபெற்றதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

வன்செயல் நடவடிக்கைக்கு காரணமாக இருந்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என மலேசியா கேட்டுக்கொள்கிறது. வன்செயல் கலச்சாரத்திற்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு உலகம் ஒன்று திரள வேண்டும் என்பதோடு உலக மனதாபிமானத்தை பாதுகாக்க வேண்டும் என புத்தாண்டில் மலேசியா கேட்டுக்கொள்வதாக அன்வார் தெரிவித்தார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படைகளின் தளபதி காசிம் சுலைமானி ‘Qasem Soleimani’ 2020ஆம் ஆண்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடைபெற்ற நான்காவது ஆண்டு நினைவு விழாவின்போது இரண்டு குண்டுகள் வெடித்ததாக அனைத்துலக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!