Latestஉலகம்

10,000 பேரை புதிதாக வேலை அமர்த்தவிருக்கிறது போயிங்

வாஷிங்டன், ஜன 28 – கோவிட் பெருந்தொற்றிலிருந்து மீட்சியடைந்து வருவதோடு, ஜெட் விமானங்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதை அடுத்து, இவ்வாண்டு போயிங் ( Boeing) நிறுவனம் , புதிதாக 10,000 பேரை வேலைக்கு அமர்த்தவிருக்கிறது.

விர்ஜினியாவைத் தளமாகக் கொண்ட அந்த நிறுவனம், அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 36,000 பேரை வேலைக்கு அமர்த்தியிருக்கின்றது.

இதனிடையே, அந்த போயிங் நிறுவனம் ஏற்படுத்தியிருக்கும் 7,000 வேலை வாய்ப்புகள், அந்நிறுவனத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பொறுப்புகளுக்கு எனவும், சுமார் 9,000 வேலை வாய்ப்புகள் ஐரோப்பாவைத் தளமாகக் கொண்டிருக்குமெனவும் கூறப்பட்டுள்ளது .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!