Latestஉலகம்

106 வயதில் ‘Vogue’ சஞ்சிகை முகப்பில் இடம்பிடித்து பச்சைக் குத்தும் கலைஞர் சாதனை

பிலிப்பீன்சின் வோக் (Vogue) சஞ்சிகை தனது ஏப்ரல் இதழின் கவர் ஸ்டாராக 106 வயது Apo Whang Od-டை வெளியிட்டுள்ளது.

அதன் வாயிலாக, இதுவரை வோக் சஞ்சிகையின் முகப்பில் இடப்பிடித்த மிகவும் வயதான கலைஞர் எனும் பெருமையை Apo Whang பெற்றுள்ளார்.

இதற்கு முன், 2020-ஆம் ஆண்டு, பிரிட்டன் வோக் சஞ்சிகையின் முகப்பில் 85 வயது நடிகை Judi Dench இடம் பெற்று பெயர் பதித்த வேளை ; தற்சமயம் அந்த சாதனையை Apo Whang முறியடித்துள்ளார்.

பச்சைக் குத்துவதில் பிரசித்தி பெற்று விளங்கும் Apo Whang, இளம் வயதிலேயே தனது தந்தையிடனிருந்து அந்த வித்தையை கற்று தேர்ந்தவர்.

பிலிப்பீன்சின் பழைமையான மம்பாபடோக் (Mambabatok) அல்லது பாரம்பரிய கலிங்க பச்சை குத்தும் கலைஞராக Apo Whang கருதப்படுகிறார்.

அனைத்துலக ரீதியில் பிரசித்தி பெற்று விளங்கும், அவரது சேவையை நாடி அந்நிய சுற்றுப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

கலிங்க பழங்குடி மக்களின் சின்னங்கள் உட்பட வலிமை, வீரம், அழகு ஆகியவற்றை குறிக்கும் அற்புதமான பச்சைகளை ஆயிரக்கணக்கானோர் தோலில் பதித்த பெருமையையும் Apo Whang பெற்றதாக, வோக் சஞ்சிகை தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.

கண் பார்வை சரியாக இருக்கும் வரையில், பச்சை குத்தும் கலையை தொடரப் போவதாக Apo Whang கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!