
நியூ யோர்க், ஏப்ரல்-15, Jeff Bezoz-சின் Blue Origin ராக்கெட்டில் 11 நிமிட விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரபல பாப் இசைப் பாடகி கேட்டி பெர்ரி (Katy Perry) மற்றும் 5 பெண்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
பூமிக்குத் திரும்பியதும் Perry தரையியை முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார்.
தரையிறங்கியதும், “வாழ்க்கையுடனும் காதலுடனும் மிகவும் இணைக்கப்பட்டதாக” உணர்ந்ததாக அவர் வருணித்தார்.
Bezoz-சின் வருங்கால மனைவி Lauren Sanchez, CBS தொகுப்பாளர் Gayle King உள்ளிட்டோரும் அவருடன் இணைந்திருந்தனர்.
அப்பயணத்தின் சிறப்பம்சமே, உலகப் புகழ்பெற்ற பாடகர் லூயிஸ் ஆம்ஸ்ட்ராங்கின் “What a Wonderful World” பாடலை Perry பாடியதைக் கேட்டதே என Gayle கூறினார்.
6 பெண்களையும் பூமிக்கு மேலே 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு அழைத்துச் சென்ற அப்பயணமானது, அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லையைக் கடந்து, அவர்களுக்கு எடையற்ற சில தருணங்களைக் கொடுத்தது.
1963-ஆம் ஆண்டுக்குப் பிறகு பெண்கள் குழு மட்டுமே விண்வெளி நோக்கி மேற்கொண்ட பயணம் இதுவாகும்.