
ஜோர்ஜ்டவுன், ஜன 16 – போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டது தொடர்பில், Koperal தகுதி கொண்ட முன்னாள் போலீஸ் அதிகாரி, அவரது மனைவி, நண்பன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
அந்த மூவரின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, 11 லட்சத்து 30,000 ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சா கட்டிகளைப் பறிமுதல் செய்ததாக, பினாங்கு போலீஸ் தலைவர் Datuk Mohd Shuhaily Mohd Zain தெரிவித்தார் . விசாரணையில் அந்த போதைப் பொருள் விநியோகத்திற்கு பின்னனியாக இருந்தது, கைதான அந்த தம்பதியரின் நண்பனான 42 வயது வர்த்தகர் என்பது கண்டிபிடிக்கப்பட்டது..
அந்த போதைப் பொருள் கும்பல் 2022 தொடக்கம் வரை தீவிரமாக செயல்பட்டு வந்ததோடு, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் அனைத்தும் உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகம் செய்யப்படவிருந்தது தெரிய வந்தது.