Latestமலேசியா

11.6 மில்லியன் ரிங்கிட் சம்பந்தபட்ட லஞ்சக் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யும்படி லிம் குவான் எங் உட்பட மூவர் கோரிக்கை

ஜோர்ஜ் டவுன், மே 26 – வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான 11.6 மில்லியன் ரிங்கிட் தங்கும் விடுதி சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்யும்படி பினாங்கு முன்னாள் முதலமைச்சர் Lim Guan Eng , அவரது மனைவி Betty Chew மற்றும் பெண் வர்த்கர் Phang Li Koon ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்வதற்கான மனுவை தாம் தாக்கல் செய்யவிருப்பதாக வழக்கறிஞர் RSN Rayer தெரிவித்தார்.

Jalan Pinhorn கில் Lim Guan Eng கொள்முதல் செய்த பங்களா சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கின் ஆதாராத்தை அரசு தரப்பு பயன்படுத்தி வருவதாகவும் 2018ஆம் ஆண்டிலேயே அந்த குற்றச்சாட்டிலிருந்தும் வழக்கிலிந்தும் லிம் விடுவிக்கப்பட்டதையும் Rayer சுட்டிக்காட்டினார். பட்டர்வெர்த் செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து அந்த வழக்கை பினாங்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்காக Lim Guan Eng, Betty Chew, மற்றும் Phang Li Koon ஆகியோர் இன்று உயர்நீதிமன்றம் வந்திருந்தனர். நீதித்துறை ஆணையர் Rofiah Mohamad முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அம்மூவரும் அதனை மறுத்து விசாரணை கோரினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!