
மெட்ரிட் , ஜன 20 – கின்னஸ் உலக சாதனை புத்தகம் , ஸ்பெயினைச் சேர்ந்த 115 வயதாகும் மரியா பிரானியாஸ் மோரேரா (Maria Branyas Morera) என்பவரை , உலகின் மிக அதிக வயதான பெண்மணியாக அறிவித்திருக்கின்றது.
சில தினங்களுக்கு முன்பு, 118 -வது வயதில் France- சைச் சேர்ந்த லூசில் ராண்டன் ( Lucile Randon )எனும் கன்னியாஸ்திரி காலமானதை அடுத்து, தற்போது மரியா உலகின் அதிக வயதான நபராக திகழ்கிறார்.
இரு உலகப் போர்கள், ஸ்பெய்ன் சளிக் காய்ச்சல் பெருந்தொற்று, ஸ்பெய்ன் உள்நாட்டுப் போர் ஆகிய பெரும் நிகழ்வுகளில் இருந்து தப்பித்து வந்தவரான மரியா, தனது 113-வது வயதில் கோவிட் தொற்றில் இருந்தும் உயிர் பிழைத்து வந்தார்.
இதில் மற்றொரு வியக்கத்தகும் விஷயம் என்னவென்றால் மருத்துவரை திருமணம் செய்துக் கொண்டவரான மரியா இதுவரை மருத்துவமனைக்கே சென்றிருக்கவில்லை.
அதற்கு குடும்ப மரபணுவே காரணமென , மரியாவின் 78 வயதாகும் அவரது மகள் கூறியிருக்கிறார்.