
கோலாலம்பூர், செப் 11 – 12 ஆவது மலேசிய திட்டத்திற்கு கூடுதலாக15 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதன்வழி ஒட்டு மொத்தமாக 415 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். மக்களுக்கான முன்னுரிமை திட்டங்களுக்காகவும் நிர்வாக திறனை மேம்பாடுத்துவது மற்றும் அடிப்படை தேவைகளுக்கான உதவி திட்டங்களுக்கும் நிதி தேவைப்படுவதாக அவர் கூறினார். மடானி பொருளாதார நோக்கத்தோடு 12 ஆவது மலேசிய திட்டத்திற்குப் புத்துயிரூட்டப்படும். குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தைத் துரிதப்படுத்தும் நோக்கத்திலான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும் என அன்வார் தெரிவித்தார்.
இதனை கருத்திற்கொண்டு 2023 ஆம் ஆண்டு முதல் ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்சம் ம் 90 பில்லியன் ரிங்கிட் என 2025ம் ஆண்டுவரை செலவிடும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளதாக இன்று மக்களவையில் 2021 அம்ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரைக்குமான 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால மறு ஆய்வு அறிக்கைகையைச் சமர்ப்பித்தபோது அன்வார் கூறினார். மேலும் 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்தியகால மறு ஆய்வில் கொள்கை, செயல் திட்டம், நகர் மேம்பாடு, ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஏழை- பணக்காரர் ஏற்றத்தாழ்வு , கடன் நெருக்கடி மற்றும் பொருளாதார அமைப்பு முறை போன்றவற்றிலும் மறுஆய்வு செய்யப்படும் என அன்வார் சுட்டிக்காட்டினார். மேலும் ஐந்து ஆண்டு காலத்திற்கு நீடித்த மற்றும் புதிய மேம்பாட்டு செலவுக்காக 400 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் விவரித்தார்.