
கோலாலம்பூர் செப் 12 -12 ஆவது மலேசிய திட்டத்தில் மித்ரா வலுப்படுத்தப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருப்தை மனித வள அமைச்சர் வ சிவகுமார் பெரிதும் வரவேற்றார். நேற்று நாடாளுமன்றத்தில் 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்தியகால மறு ஆய்வு அறிக்கையை தை தாக்கல் செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 12 ஆவது மலேசிய திட்டத்தில் அனைத்து இன மக்களும் நன்மை அடைவார்கள் என்பதோடு மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் பொருளாதார உருமாற்ற திட்டமும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என என்று பிரதமர் அறிவித்திருந்ததை சிவக்குமார் சுட்டிக்காட்டினார். இந்திய சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்ட மித்ரா மூலம் சமுதாயம் மேன்மேலும் நன்மை அடைய வேண்டும் என்ற இலக்கில் மித்ராவை ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது என்று மனித வள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.