Latestஉலகம்மலேசியா

12 லட்சத்துக்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் இன்னும் மலேசியாவிலிருந்து வெளியாகவில்லை

கோலாலம்பூர், ஜூலை 26 – 2018ஆம் ஆண்டில் இருந்து கடந்தாண்டு வரை மலேசியா வந்தடைந்த சீன நாட்டு பிரஜைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் மலேசியாவை விட்டு வெளியேறாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. மலேசிய குடிநுழைவுத் துறையின் தரவுகள் வாயிலாக அது தெரிய வந்திருப்பதாக உள்துறை அமைச்சு கூறியது.

அக்கால கட்டத்தில் 71 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் மலேசியாவுக்கு வந்திருந்தனர். அவர்களில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மட்டுமே நாட்டில் இருந்து வெளியேறியிருப்பதை மலேசிய குடிநுழைவுத் துறையின் தரவுகள் காட்டுகின்றன.

மக்களவை கேள்வி பதில் நேரத்தின் போது அப்புள்ளி விவரங்களை வெளியிட்டிருந்த உள்துறை அமைச்சு, அக்கால கட்டத்தில் ஏறக்குறைய மூவாயிரம் சீன நாட்டுப் பெண்கள், மலேசிய ஆண்களைத் திருமணம் புரிந்து கொண்டிருப்பதும் தெரிய வந்திருப்பதாகக் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!