Latestஉலகம்

12-வது முறையாக உலகின் சிறந்த விமான நிலையமாக மகுடம் சூடியது சாங்கி விமான நிலையம்

சிங்கப்பூர், மார்ச் 16 – சிங்கப்பூரின் சாங்கி ( Changi ) விமான நிலையம், 12-வது முறையாக உலகின் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. கோவிட் பெருந்தொற்றினால் 2021-லும் 2022-லும் தான் இழந்த அந்த முதல் இடத்தை , அந்த விமான நிலையம் மீண்டும் பெற்றது.

லண்டனைத் தளமாகக் கொண்ட ஆய்வு நிறுவனமான Skytrax, சாங்கி விமான நிலையத்தை ஆசியாவின் மிகச் சிறந்த விமான நிலையமாகவும் பட்டியலிட்டது.

இந்நிலையில் கத்தார், Doha-விலுள்ள Hamad அனைத்துலக விமான நிலையம் இரண்டாவது இடத்தையும், ஜப்பான் தொக்யோ-வில் உள்ள Haneda விமான நிலையம் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!