Latestஉலகம்

12,000 ஆண்டுகள் பழமையான நாரையின் முட்டை கண்டெடுப்பு

மெக்சிகோ ஆகஸ்ட் 4 – மெக்சிகோவில் புதிய விமான நிலையத்திற்கான கட்டுமான பணியின்போது, சுமார் 8,000 முதல் 12,000 ஆண்டுகள் பழமையான நாரை முட்டையின் படிபம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜூம்பாங்கோவில் உள்ள ஃபெலிப் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தின் கட்டுமான தளத்தில், களிமண் மற்றும் கற்களுக்கு மத்தியில் 31 சென்டிமீட்டர் ஆழத்தில் இந்த படிமம் கண்டெடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

8,000 முதல் 33,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற ஏரியின் தளமாக இந்த பகுதி இருந்ததாகவும், மத்திய மெக்சிகோவில் ஒரு காலத்தில் நாரை பறவைகள் செழித்து வளர்ந்ததாகவும், புதைபடிவ முட்டையின் மூலம் தெரியவந்திருக்கிறது.

இன்றைய அமெரிக்க நாரை இனங்கள், அதன் பிரகாசமான இளஞ்சிவப்பு இறகுகளுக்கு பெயர் பெற்றவை. முக்கியமாக தென் அமெரிக்கா, கரீபியன், யுகடன் தீபகற்பம் மற்றும் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில் இவை அதிகம் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!