
கோலாலம்பூர், மார்ச் 13 – காஸா மற்றும் பாலஸ்தீன் போரின் போது மனிதாபிமான அடிப்படையில் சிசிச்சை வழங்க மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்ட 127 பாலஸ்தீனியர்கள் நாடு திரும்பவது குறித்து எகிப்துடன் இன்னமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தற்காப்பு துணை அமைச்சர் Adly Zahari கூறியுள்ளார்.
தற்போது, ஜாகிம்முடன் இணைந்து தற்காப்பு அமைச்சு அவர்களுக்கு புகலிடம் வழங்கி வருகிறது.
அவர்கள் நாடு திரும்புவதற்கான பேச்சு வார்த்தை கூடிய விரைவில் முடிவாகும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட அந்த பாலஸ்தீனியர்கள் கடந்தாண்டு ஆகஸ்டு 16ஆம் திகதி இங்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது காஸா- பாலஸ்தீன போரும் நிறுத்தப்பட்டுருப்பதால், விரைவில் அவர்கள் நாடு திரும்புவது சாத்தியமாகும் என அவர் குறிப்பிட்டார்.