ஜகார்த்தா, பிப் 16 – தனது 13 மாணவிகளை கற்பழித்த சமயப் பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் ஆயுதள் தண்டனையை விதித்தது. தங்கும் வசதியைக் கொண்ட சமய பள்ளியில் அந்த கொடுரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பந்தப்பட்ட 36 வயது ஆசிரியரால் பாலியல் ரீதியில் துன்புறத்தப்பட்ட அந்த வயதுக் குறைந்த 13 மாணவிகளில் தற்போது எண்மர் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டு காலமாக அந்த பள்ளியில் படித்து வந்த ஏழை மாணவிகளை அந்த ஆசிரியர் கற்பழித்து வந்ததைத் தொடர்ந்து பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.