பெட்டாலிங் ஜெயா, பிப் 9- இன்றிரவு 8 மணி வரையில் நாட்டிலுள்ள 13 மாநிலங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சரவாக், சபா, பகாங், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய அந்த 13 மாநிலங்களிலும் இடியுடன் கூடிய கனமழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என Met Malaysia தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருந்தது.