Latestமலேசியா

13 லட்சம் ரிங்கிட் மதுபானம் பறிமுதல்

ஈப்போ, டிச 10 – அரச மலேசிய சுங்கத்துறையின் பேரா மாநில அதிகாரிகள் சிலாங்கூர் போர்ட் கிள்ளானில் 13 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய மதுபானங்களை கடத்தும் முயற்சியை முறியடித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை பேரா சுங்கத்துறையின் அமலாக்க பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த மதுபான கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது. கொள்கலன் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 48,720 டின்களில் இருந்த அந்த மதுபானங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பேரா மாநில சுங்கத்துறை இயக்குனர் டாக்டர் Mohamad Saprin வெளியிட்ட அறிக்கையில் கூறினார். இதனிடையே இம்மாதம் 3 ஆம்தேதி மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனை நடவடிக்கையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு லட்சம் ரிங்கிட் மதிப்புடைய 45 மினி மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!