கோத்தா பாரு , மார்ச் 3 – கிளந்தானில் , Pasir Mas, Tumpat ஆகிய இரு மாவட்டங்களில் இரண்டாம் கட்ட வெள்ளத் தடுப்புக்கான திட்டத்தை சுற்று சூழல் நீர் வள அமைச்சு முன் வைத்திருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.
130 கோடி ரிங்கிட்டை உட்படுத்தியிருக்கும் அத்திட்டம் அவ்விரு பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வாக அமையுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்ர்.
தற்போது 60 கோடி ரிங்கிட் செலவில் Rantau panjang -கில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதல் கட்ட வெள்ளத் தடுப்பு திட்டத்தின் தொடர்சியாக புதிய திட்டம் அமைவதாக அவர் குறிப்பிட்டார்.