இஸ்தான்புல், பிப் 15 – லுக்கிமியா ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் துருக்கியைச் சேர்ந்த முசஃப்பர் கயாசான் ( Muzaffer Kayasan ) , தனக்கு கோவிட் தொற்று ஏற்பட்டபோது , இறந்து விடும்வோம் என்றே எண்ணியிருந்தார்.
எனினும், 78 முறை தொடர்ச்சியாக கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதோடு, 14 மாதங்கள் தொடர்ந்து மருத்துவமனையிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார் 56 வயது கயாசான்.
அதன் வாயிலாக எவரும் விரும்பாத ஒரு சாதனையையும் அவர் படைத்திருக்கின்றார். கயாசானின் மன உறுதி தான், அவரை தொற்றிலிருந்து மீட்சி பெற வைத்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.