
புதுடில்லி, ஜன 10 – 140 பயணிகளுடன் புதுடில்லியிலிருந்து Bhubaneswar புறப்பட்ட Vistara விமானம் அவரசமாக தரையிறங்கியது. Hydraulic காற்றழுத்த முறையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த விமானம் மீண்டும் புதுடில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதாக இந்திய சிவில் விமான போக்குவரத்துத்துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சிறு அளவில் நுட்பப் பிரச்சனை ஏற்பட்டது கண்டறியப்பட்டதாக Vistara விமான நிறுவத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானத்தை புதுடில்லி விமான நிலையத்திற்கே விமானி தரையிறக்கினார் என அந்த பேச்சாளர் கூறினார். அதன் பின் மறொரு விமானத்தின் மூலம் பயணிகள் அனைவரும் Bubaneswar சென்றனர்.