
கோலாலம்பூர், ஜூன் 17 – 147 பழைய சட்டங்கள் உட்பட நடப்பில் இருக்கும் சட்டங்களை மறு ஆய்வு செய்யும்படி, பிரதமர் துறையின் சட்டவிவகாரப் பிரிவை, பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உத்தரவிட்டிருக்கின்றார்.
கால மாற்றத்திற்கு ஏற்ப சட்டங்களில் திருத்தம் செய்வது அல்லது ரத்து செய்வது தொடர்பில் ஆய்வினை செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போதைய கால கட்டத்தில் இலக்கவியல் தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சியினைக் கண்டுள்ளது. ஆனால் அந்த வளர்ச்சிக்கு ஏற்ப நடப்பில் இருக்கும் சட்டங்கள் ஏற்புடையதாக அமையவில்லை என பிரதமர் சுட்டிக் காட்டினார்.
மலாயாப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் பிரதமர் அதனை தெரிவித்தார்.