Latestமலேசியா

15ஆவது பொதுத்தேர்தல் தேசிய முன்னணியின் பயணம் தொடங்கிவிட்டது

ஷா அலாம், ஜூன் 6 – 15 ஆவது பொதுத் தேர்தலை நோக்கி தேசிய முன்னணியின் பயணம் தொடங்கிவிட்டது. கடந்த சனிக்கிழமையன்று Janda Baik-கில் நடைபெற்ற தேர்தல் விளக்க கூட்டத்தை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் Ahmad Zahid Hamidi தொடக்கி வைத்தார். அந்த நிகழ்வில் அம்னோவின் உதவித் தலைவரும் பிரதமருமான Ismail Sabri-வுடன் தேசிய முன்னணியின் தேர்தல் இயக்குனர் முகமட் ஹசானும் கலந்துகொண்டார். பொதுத் தேர்தலுக்கு தயாராகுவதோடு அதனை எதிர்நோக்குவதற்கான வியூக திட்டம் தொடங்கிவிட்டதாக முகமட் ஹசான் தமது முகநுலில் பதிவிட்டுள்ளார். தேர்தல் தொடர்பான விளக்கக் கூட்டம் தேசிய முன்னணிக்கு மிகவும் முக்கியமானது என்பதால் அக்கூட்டங்களில் இப்போது கவனம் செலுத்தப்படும் என கூறப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான், தேசிய முன்னணி தமைமைச் செயலாளர் டாக்டர் Zamri Abdul Kadir ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!