Latestமலேசியா

15 ஆவது தேர்தலில் போட்டியிட இன்னும் தொகுதி கிடைக்கவில்லை -கைரி கவலை

கோலாலம்பூர், செப் 24 – எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமக்கு இன்னும் தொகுதி கிடைக்காதது குறித்து கைரி ஜமாலுடின் கவலைத் தெரிவித்திருக்கிறார். இவ்வாண்டு தேர்தல் நடத்தப்படுமா அல்லது நடத்தப்படாதா என அமைச்சவை உறுப்பினர்கள அடைந்துள்ள கவலையைவிட தமது அரசியல் எதிர்காலம் குறித்த கவலை தமக்கு அதிகமாக இருப்பதாக Rembau நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி கூறினார். அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்னும் தொகுதி எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய எனது கவலையாகும்.

இன்று கோலாலம்பூரில் ஆசியாவில் தோல் மருத்துவம் தொடர்பான மாநாட்டை தொடக்கிவைத்த பின் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுடின இதனை தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மழைக் காலத்தின்போது தேர்தல் நடத்துவது மற்றும் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் சட்டமன்றத்தை கலைப்பதில்லை என ஆறு மாநிலங்கள் எடுத்துள்ள முடிவு குறித்தும் தாம் கருத்துரைத்தாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!