
கோலாலம்பூர், மார்ச் 29 – 15ஆவது பொதுத் தேர்தலின்போது வினியோகிக்கப்பட்ட அஞ்சல் வாக்கு சீட்டுக்களில் 85 விழுக்காட்டை தேர்தல் ஆணையம் பெற்றது. அஞ்சல் வாக்குகள் நடைமுறையில் தேர்தல் ஆணையம் முன்னேற்றத்தை கொண்டு வந்திருந்தாலும் அதனை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டம் இருப்பதாக பிரதமர் துறையின் சட்டம் மற்றும் அமைப்புகளுக்கான சீரமைப்பு அமைச்சர் Azalina Othman நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.