
கோலாலம்பூர், ஜூன் 14 – எதிர்வரும் 15-ஆவது பொதுத் தேர்தலில் கெடா அம்னோ பாஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனித்தே போட்டியிடும். பாஸ் தலைவர்கள் அம்னோவை தொடர்ந்து மோசமாக சாடி வருவதால் அக்கட்சியுடனான ஒட்டும் உறவும் முடிந்துவிட்டதாக கெடா அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் Syed Johan Rizal தெரிவித்தார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மலாக்கா தேர்தல் முதல் அம்னோவை பாஸ் கட்சி கடுமையாக தாக்கி வருகிறது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவதற்கு தயாராய் இருக்கிறோம் என அவர் கூறினார். கெடா மாநில சட்டமன்றத்திற்கான அனைத்து 36 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அம்னோ தயாராய் இருப்பதாக Syed Johan Rizal தெரிவித்தார்.