
கோலாலம்பூர், ஜன 15 – 15 ஆவது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தாம் விலக வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கேள்வி எழுப்பியுள்ளார். அம்னோவின் மோசமான தோல்விக்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் பொறுப்பேற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார். 15ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ வெற்றிபெற்றால் இஸ்மாயில் சப்ரிதான் அம்னோவின் பிரதமர் பதவிக்காக வேட்பாளர் என் முன்னிறுத்திதான் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர அம்னோ இளைஞர் பிரிவின் கீழறுப்பினால் இளைஞர்களின் வாக்குகளை பெறுவதிலும் அம்னோ தோல்வி கண்டது.
ஆனால் 15ஆவது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு எவரும் பொறுபேற்க விரும்பவில்லை. நான் பதவி விலகும்படி நெருக்குதல் அளிக்கப்படுகிறது. நான் ஏன் பதவி விலக வேண்டும். நமது Poster Boy என்று கூறப்பட்ட இஸ்மாயில் சப்ரி என்ன ஆனார் என்றும் ஸாஹிட் வினவினார். மாநில அம்னோ தொடர்பு குழு தலைவர்கள் , அம்னோ டிவிசன் தலைவர்கள் சில பிரிவுகளின் தலைவர்கள் இருக்கின்றனர். எனவே தேர்தல் தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் ஸாஹிட் வலியுறுத்தினார்.