Latestஉலகம்

15 கம்போடிய மாணவர்களுக்கு பைனரி பல்கலைகழகத்தின் முழு உபகாரச் சம்பளம்

புனோம் பென், மார்ச் 28 – கம்போடியாவைச் சேர்ந்த 15 முஸ்லீம் மாணவர்களுக்கு, சிலாங்கூரில் செயல்பட்டு வரும் பைனரி பல்கலைக்கழகம் ( Binary University ), முழு உபகாரச் சம்பளத்தை வழங்கியிருக்கின்றது.

Binary பல்கலைகழகத்தில் , கணக்காய்வாளர், கணினி அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் நான்கு ஆண்டு கால மேற்படிப்பைத் தொடர்வதற்காக, குடும்ப பின்னனியின் அடிப்படையில் அந்த உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அப்பல்கலைக்கழகத்தின் CSR -வர்த்தக சமூக கடப்பாட்டின் ஒரு பகுதியாக, அனைத்துலக உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ் இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்படுவதாக, அப்பல்கலைகழக நிர்வாக தலைவர் டான்ஶ்ரீ Professor Joseph Adaikalam தெரிவித்தார்.

முன்னதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் கம்போடியாவுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, கம்போடிய மாணவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளத்தை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கம்போடிய தலைநகர் புனோம் பென் –னில் ( Phnom Penh ), பிரதமர் அன்வாரும், கம்போடிய பிரதமர் ஹன் சென்-னும் (Hun Sen) கலந்து கொண்ட நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.
அந்த உதவித் தொகை மொத்தம் 11 லட்சம் அமெரிக்க டாலர் பெருமானமுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!