பெசுட், மார்ச் 7 – திரெங்கானு, பெசுட், புக்கிட் கெளுவாங் (Bukit Keluang) கடற்கரைப் பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக நம்பப்படும் 15 பூனைகளின் வயிற்றுப் பகுதியில் வீக்கமும், வாய் மூக்கு பகுதிகளில் ரத்தமும் இருந்ததாக, போலீசார் தங்களின் தொடக்க விசாரணையில் கூறியுள்ளனர்.
கடற்கரை ஓரத்தில் மடிந்து கிடந்த அந்த பூனைகளை ஆடவர் ஒருவர் கண்டு புதைத்திருந்தார். எனினும் மேற்விசாரணைக்காக அந்த பூனைகளில் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டதாக பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மட் ( Abdul Rozak Muhammad ) தெரிவித்தார்.
இதனிடையே, அந்த பூனைகள் கொல்லப்பட்டது தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக, மாநில கால்நடை துறை இயக்குநர் Dr. Anun Man தெரிவித்தார்.
அந்த பூனைகளுக்கு விஷம் வைத்தவர்களுக்கு 2015 –ஆம் ஆண்டு பிராணிகள் நல சட்டத்தின் கீழ் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரிங்கிட் வரையில் அபராதமும் விதிக்க முடியுமென்றாரவர்.