
அம்பாங், செப் 8 – 15 வயது வளர்ப்பு மகளை 3 வருடங்களாக கற்பழித்து வந்த 30 வயது ஆடவனை போலிசார் கைது செய்துள்ளனர். 2020ல் அப்பெண் 13 வயதாக இருந்தபோது அவ்வாடவன் இக்குற்றத்தை புரியத்தொடங்கியதாக அம்பாங் ஜெயா OCPD Asst Comm Mohd Azam Ismail தெரிவித்தார்.
அந்த ஆடவன் நேற்று வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டான்.
இந்நிலையில், இக்குற்றத்தை மறுத்துள்ள அவ்வாடவன், தான் அப்பிள்ளையிடம் மிகவும் கண்டிப்பாக நடந்துக் கொள்வதால், இம்மாதிரி பொய் சொல்வதாக கூறியுள்ளான்.
அக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மர்ம உறுப்பில் காயங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். கைதான ஆடவன் செப்டம்பர் 14ஆம் திகதி வரையில் மேல் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.