15 வீடுகள் தீயில் அழிந்தன 300 பேர் பாதிப்பு

கூச்சிங், ஜன 5 – சரவாவில் Belaga, Sungai Asap-பில் 15 வரிசை வீடுகள் தீயில் அழிந்ததில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டனர். இன்று பிற்பகல் மணி 2.20 அளவில் இத்தீவிபத்து ஏற்பட்டது குறித்து தகவல் கிடைத்தாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பக்கூன் நீர் மின் அனைக்கட்டு திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடியேற்றம் செய்வதற்காக 20 புளோக்குகளில் 300 வீடுகள் இருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இவற்றில் F புளோக்கில் ஏற்பட்ட தீயில் 15 வீடுகள் அழிந்ததாக தீயணைப்பு படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடைசி புளோக்கில் தீ விபத்து நிகழ்ந்ததால் பெரிய அளவில் சேதம் இல்லை. தீ மற்ற புளோக்குகளுக்கு பரவுவதை தடுப்பதற்கு அதிகமான குடியிருப்புவாசிகள் மேற்கொண்ட முயற்சி பாராட்டக்கூடியதாக இருந்ததாக Murum சட்டமன்ற உறுப்பினரான Kennedy Chukpai தெரிவித்தார்.