கோலாலம்பூர், பிப் 22 – அரசாங்கம் பரிந்துரைத்திருக்கும் 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பள முறை இன்னும் கட்டாயப்படுத்தப்படாத நிலையில், நாட்டில் ஏற்கனவே தங்களது தொழிலாளர்களுக்கு அந்த சம்பளத்தை சில முதலாளிமார்கள் வழங்கி வருவதை மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் சுட்டிக் காட்டினார்.
அந்த புதிய குறைந்தபட்ச சம்பளத் தொகை குறித்து அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வரும் நிலையில், Aeon, Westports ஆகிய நிறுவனங்கள் அந்த சம்பளத் தொகையை தனது தொழிலாளர்களுக்கு வழங்கி வருவதாக அவர் கூறினார்.
தொழிலாளர் விவகாரத்தில் சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் அந்நிறுவனத்தின் அணுகுமுறையை நாட்டில் உள்ள இதர முதலாளிமார்களும் பின்பற்றும்படி அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டார்.