Latestமலேசியா

1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பள அமலாக்க ஒத்தி வைப்பு ; அமைச்சரவையின் முடிவு

கோலாலம்பூர், டிச 31 – அமைச்சரவையின் சம்மதம் இன்றி, 5 -கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட சிறு நிறுவனங்களுக்கான 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பள அமலாக்கம் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுவதை , மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் மறுத்தார்.

அந்த முடிவைத் தாம் சொந்தமாக எடுத்ததாக கூறப்படுவதை மறுத்த அவர், கடந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக , PSM கட்சியின் துணைத் தலைவர் S . Arutchelvan , அந்த முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டதில்லை எனவும், அந்த விவகாரத்தில், மலேசிய முதலாளிகள் சம்மேளனம் , சிவக்குமாரின் மனதை மாற்றியுள்ளதா என கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் ஜூலை முதலாம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்ட சிறு நிறுவனங்களுக்கான 1,500 ரிங்கிட் சம்பள அமலாக்கம் குறித்த முடிவு ஏமாற்றத்தை அளித்திருப்பதாக, MTUC தொழிற்சங்க காங்கிரஸ்-சும், தொழிலாளார் சட்ட சீர்திருத்த அமைப்பும் தெரிவித்திருந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!