Latestமலேசியா

16 ஆவது பொதுத் தேர்தல்வரை பிரதமர் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு GPS முழு ஆதரவை வழங்கும்

கோலாலம்பூர், செப் 17- 16 ஆவது பொதுத் தேர்தல்வரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு Gabungan Parti Sarawak (GPS) முழு ஆதரவை வழங்கிவரும் என அந்த கூட்டணியின் தலைவரும் சரவா முதலமைச்சருமான Abang Johari Openg தெரிவித்திருக்கிறார். அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் நாட்டின் மீது அரசாங்கத்தின் நிர்வாகம் கவனம் செலுத்துவதற்கும் GPS ஆதரவு முக்கிய அம்சமாக திகழும் என அவர் கூறினார். அன்வாருக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவோம். இதன்வழி அடுத்த தேர்தல்வரை நிலையான கூட்டரசு அரசாங்கத்தை நாம் கொண்டிருக்க முடியும் என கூச்சிங்கில் மலேசிய தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது Abang Johari Openg தெரிவித்தார்.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ள உரிமைகள் மற்றும் சலுகைகளையும் 1963 ஆண்டின் மலேசிய உடன்பாட்டையும் தொடர்ந்து நிலைநாட்டப்பட்டு தலைவர்களிடையே செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின் அம்சங்கள் அமல்படுத்த வேண்டும் என்பதே சரவாக் மக்களின் கூட்டு விருப்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார். 1963ம் ஆம் ஆண்டின் உடன்பாட்டின் கீழ் சரவா மற்றும் சபா குறிப்பிட்ட கோரிக்கைகைள கொண்டிருந்தாலும் நமது நேசமிகு மலேசிய நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் ஒத்துழைப்புக்கும் சரவா, சபா மற்றும் தீபகற்க மலேசியா ஒத்துழைக்க முடியாது என்று அர்த்தம் இல்லையென Abang Johari Openg விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!