Latestஇந்தியா

16 மாதங்கள் மருத்துவமனையில் மறந்து விடப்பட்ட 2 கோவிட் நோயாளிகளின் உடல்கள்

பெங்களூர், டிச 3 – கடந்தாண்டு ஜூலையில் கோவிட்டால் உயிரிழந்த 40 வயது பெண் மற்றும் 67 வயது முதியவர் இருவரின் உடல்கள், 16 மாதங்களுக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்ட அவல நிலை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
கவனக் குறைவின் காரணமாக நிகழ்ந்த அந்த துரதிஷ்டமான சம்பவம், இந்தியா பெங்களூரில் உள்ள ராஜாஜிநகர் ( Rajajinagar ) மருத்துவமனையில் நிகழ்ந்தது.

அவ்விருவரது உடல்களையும், பெங்களூர் மாநகராட்சி மன்றம் தகனம் செய்திருக்க வேண்டும். ஆனால் , தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக மருத்துவமனை தரப்பு நினைத்துக் கொண்டது.
ஆனால் சவக் கிடங்கில் இருந்து கடும் துர்நாற்றம் வீசவே, சுத்தப்படுத்தும் பணிகளுக்காக பணியாளர்கள் அனுப்பப்பட்டபோது, நீண்ட நாட்களாக கவனிக்கப்படாமல் இருந்த இரு உடல்களைக் கண்டெடுத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!