
கோத்தா பாரு, நவ 7- இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை கிளந்தான் போலீசார் 16 வெவ்வேறு வகையான துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர் என கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோமுஹம்மட் ஸாகி ஹாருன் தெரிவித்தார். துப்பாக்கியை வைத்திருந்ததாக 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதாக அவர் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட பெரும்பாலான சுடும் ஆயுதங்கள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் அவர் கூறினார். குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வதில் தொடர்ந்து தாய்லாந்து அதிகாரிகளுடன் நாங்கள் ஒத்துழைப்போம் என்பதோடு எல்லை கட்டுப்பாடுகளையும் கடுமையாக்குவோம் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முஹம்மட் ஸாகி தெரிவித்தார்.