Latestமலேசியா

17,170 பேருக்கு கோவிட் தொற்று; சிலாங்கூரில் 7,163 பேர் பாதிப்பு

கோலாலம்பூர், ஜூலை 29- நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,170 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,078,646ஆக உயர்ந்திருப்பதாக தலைமை இயக்குநர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
சிலாங்கூரில் மட்டும் 7,163 பேர் கோவிட் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். இதனைத் தவிர, கோலாலம்பூரில் 2,138 பேருக்கும் ஜோகூரில் 1,054 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சபாவில் 776 பேரும் நெகிரி செம்பிலானில் 884 பேரும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இந்நிலையில் நாட்டில் இன்று 174 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர். அதன்படி, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,725ஆக உயர்ந்திருக்கின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!