புவனேசுவர், பிப் 22 – பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே ஆவான் என்பார்கள். அதுபோன்று 20 ஆண்டுகால கட்டத்தில் 18 -கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்ட 67 வயது முதியவனை ஒடிசா, புவனேஸ்வர் பகுதியில் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
51 வயது மருத்துவர் என ஏமாற்றி அந்த நபர் வழக்கறிஞர், மருத்துவர் , ராணுவ அதிகாரி போன்ற உயர் நிலையில் உள்ள பெண்களையே திருமணம் செய்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
சில மருத்துவ ஆய்வகங்களையும் நடத்தி வரும் பிபு பிரகாஷ் ஸ்வைன் (Bibhu Prakash Swain ), எனும் அந்த நபர், சில மாதங்களாக மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் சம்பளம் கொடுக்காததையும், போலி கடன் பற்று அட்டைகளைப் பயன்படுத்தி வங்கிகளிடம் இருந்து பணம் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.